துளசி இலைகளால் செய்யப்படும் துளசி மாலை மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இதனையொரு ஆன்மீக அணிகலனாக பலர் பயன்படுத்துகின்றனர்.
இத் துளசி மாலை ஆன்மீக ரீதியாகும் உடல் ரீதியாகவும் நல்ல மாற்றங்களைத் தரும்.
துளசி மாலையை அணியும்போது நமது மன எண்ணங்கள் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும்.
ஒரு சிலர் துளசி மாலையை கழுத்தில் அணியாமல் ஜெபம் கூறுவதற்கு மட்டும் பயன்படுத்துவார்கள். இதனை எப்படி செய்தாலும் பரவாயில்லை.
முதலில் துளசி மாலையை வாங்கி வந்ததும் அதனை மஞ்சள் நீரில் போட்டு ஊறவைக்க வேண்டும்.
பின்னர் சுத்தமான நீர் அல்லது கோமியத்தால் ஒரு தடவை கழுவ வேண்டும்.
ஒரு துணியைக் கொண்டு அதனை துடைத்து பூஜை அறையில் விஷ்ணுவின் படத்தின் அருகில் வைத்து வழிபட வேண்டும்.
துளசி மாலையை அணிந்திருப்பவர்கள் அசைவ உணவுகள், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை உண்ணக்கூடாது.
அதுமட்டுமின்றி மது, புகை, வெற்றிலை போன்றவற்றையும் பயன்படுத்தக்கூடாது.
இம் மாலையை அணிந்துகொள்பவர்கள் உடல் மற்றும் மனதால் தூய்மையாக இருக்க வேண்டும்.
குளிக்கும்போது, நீச்சல் பழகும்போது, உடற்பயிற்சி செய்யும்போது துளசி மாலையை அணியவே கூடாது.





