தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான நீண்டகால திட்டமாகும் என தேசிய மக்கள் படையின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.

இது நிறுவன மட்டத்தில், சூழலியல் மற்றும் நெறிமுறை ரீதியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் என்று திரு.சுரவீர குறிப்பிடுகிறார்.

“தூய்மையான இலங்கைத் திட்டம் என்பது இந்த வீழ்ச்சியடைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்ட மிக ஆழமான, அர்த்தமுள்ள மற்றும் நீண்ட கால வேலைத்திட்டமாகும். அதற்குள் ஜனாதிபதி செயலணி அமைக்கப்படுகிறது. மேலும், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள், சுற்றாடல் மற்றும் சமூக வாழ்வு, நெறிமுறைகள் ஆகியவற்றுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் மாபெரும் வேலைத்திட்டத்தின் ஆரம்பம் இதுவாகும். இது ஒரு வாரம், இரண்டு அல்லது ஒரு வருடத்தில் முடிவடையும் திட்டம் அல்ல, மாறாக நாட்டின் மறுமலர்ச்சியை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட மற்றும் கட்டியெழுப்பப்பட்ட திட்டம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here