தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் தனது 38 வயதில் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
திடீர் மாரடைப்பைத் தொடர்ந்து கரவனெல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிறிது நேரத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
கோசல நுவான் கேகாலை மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும், தேசிய மக்கள் சக்தியின் ஒரு முக்கிய இளம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








