தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்) ஆகிய கட்சிகளுக்கு தவெக அழைப்பு விடுத்தது.

தவெகவின் அழைப்பை ஏற்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன.

அதே சமயம் திமுக கூட்டணியிலேயே தொடர்வதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அறிவித்தது.

இந்த நிலையில் இரண்டு இடங்களை கைப்பற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) முன்னதாக ஆதரவு அளிப்பதாக கூறிய நிலையில் தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்த கட்சி சில அதிகாரங்களை கோருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில் தவெக தலைவர் விஜய், விசிக தலைவர் திருமாவளவனை அசோக் நகரில் உள்ள அவரது கட்சி அலுவலக்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதேவேளை விசிக கட்சி அலுவலகத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here