நியூசிலாந்து அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடர் தோல்வியிலிருந்து தப்பியது.

இன்று (02.01.2025) நெல்சனில் அமைந்துள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 7 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக குசல் ஜனித் பெரேரா 46 பந்துகளில் 101 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க 24 பந்துகளை எதிர்கொண்டு 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

குசல் மெண்டிஸ் 22 ஓட்டங்களையும் அவிஸ்க பெர்னாண்டோ 17 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸங்க 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் ஹென்றி, ஜேகப் டஃப்பி, ஷகரே ஃபோல்கஸ், ஷாட்னெர், மிச்செல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

219  ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

நியூசிலாந்து அணி சார்பில் ரச்சின் ரவிந்திரா 69 ஓட்டங்களையும், டிம் ரொபின்சன் 37 ஓட்டங்களையும் மிச்செல் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணி சார்பில், பந்து வீச்சில் சரித் அசலங்க 3 விக்கெட்டுக்களையும், வணிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும், நுவான் துஷார, பினுரு பெர்னாண்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.

இதன்படி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற அடிப்படையில் நியூசிலாந்து அணி இருபதுக்கு இருபது தொடரை கைப்பற்றியுள்ளது.

இதேவேளை இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கை நேரப்படி எதிர்வரும் 5 ஆம் திகதி பேசின் ரிசேர்வ் வெலிங்டன் மைதானத்தில் இடம்பெற உள்ளமை குறிப்படத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here