கடந்த 2023 க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சு , தேசிய கல்வி நிறுவகம் , மூன்றாம் நிலை ஆணைக்குழு இணைந்து நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்த திறன் அபிவிருத்தி செயலமர்வின் மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ( 07 ) புதன் கிழமை இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை பற்று பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் லோகினி விவேகானந்தராஜ் , கோட்டக்கல்விப்பணிப்பாளர் , அதிபர் , ஆசிரியர்கள், மாணவர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
முதல் நிகழ்வாக அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு , மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று , வரவேற்புரை , பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் உரை இடம்பெற்றதை தொடர்ந்து , கோட்டக்கல்விப்பணிப்பாளர் உரை , இடம்பெற்றதை தொடர்ந்து மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் சான்றிதழ்களை பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் உதவிப் பிரதேச செயலாளர் லோகினி விவேகானந்தராஜ் ,கோட்டக்கல்வி பணிப்பாளர் என பலர் வழங்கி வைத்தனர்.








