“சிரிலிய சவிய” கணக்கு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்த முன்பிணை மனு இன்று (06) மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) பொறுப்பதிகாரிக்கு ஒக்டோபர் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.








