நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் 2026 அக்டோபர் 27 செவ்வாய்க்கிழமை மூடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், இது அக்டோபர் 27 ஆம் திகதிக்கு மாத்திரமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பாடசாலைகள் மூடப்பட்டாலும், அழகியல் பாடங்களுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் செய்முறைத் தேர்வுகள் முன்னர் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








