அதிக சந்தை தேவைக்கு பதிலளிக்கும் வகையில் நாளை (27) க்குள் நாடு முழுவதும் 700,000 வீட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் தெரிவிக்கிறது.
அதிகரித்து வரும் நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்ய எரிவாயு விநியோகத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது என தினமின அரச இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
குட்வில் ‘GOODWILL ‘ என்ற கப்பல் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு அக்டோபர் 24 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது, அக்டோபர் 22 ஆம் திகதி வந்த சிலிண்டர்களுடன் மேலும் இன்று (26) மற்றொரு சரக்கு தொகையும் கிடைக்கப்பெற உள்ளது.
அக்டோபர் 22 ஆம் திகதி பெறப்பட்ட 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை பயன்படுத்தி அக்டோபர் 23 முதல் 25 வரை நாடு முழுவதும் 350,000 வீட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் சந்தையில் போதுமான இருப்பு இருக்கும் என லிட்ரோ உறுதியளித்துள்ளது, இதனால் நுகர்வோர் பற்றாக்குறையை எதிர்கொள்ளாமல் வீட்டு எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








