நாட்டில் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களில் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நாடு முழுவதும் 4 பிரிவுகளாக பிரித்து ஒரு மணி நேரத்திற்கு மின்வெட்டு அமுல்படுத்த தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

அதற்காக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தேசிய கட்டமைப்பு இயக்குனர் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி புத்திக சமரசிங்க தெரிவித்தார்.

“இது தொடர்பான விடயங்கள் எமது இணையதளத்திலும், பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணைய பக்கத்திலும் வெளியிடப்பட்டிருக்கும் என கருதுகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here