நுவரெலியா பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட லேடிமெக்லம் டிரைவ் வீதியில் அமைந்துள்ள கூட்டுறவு சங்க விடுதியில் மர்மமான முறையில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பனாபிட்டிய கரன்தெனிய பகுதியை சேர்ந்த மொஹமட் பாயிஸ் (வயது 31) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதேநேரத்தில் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட இவர் கடந்த (19) ஆம் திகதி வெள்ளிக்கிழமை நுவரெலியாவுக்கு வருகை தந்து கூட்டுறவு சங்க விடுதியில் (21.07) ஞாயிற்று கிழமை காலை வரை தங்குவதற்கு அறை ஒன்றை வாடகைக்கு பெற்று தங்கியுள்ளார்.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.








