இன்று மதியம் 12.30 க்கு பின்னர் சகல இலங்கை வங்கிக் கிளைகளிலும் தங்களின் நடவடிக்கைகளில் இருந்து விலகி, பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இப் பணிபுறக்கணிப்பானது ஊக்குவிப்பு தொகை குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய தினத்துக்குள் தங்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் 6 ஆம் திகதி அடையாளப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் எனவும் அந்த சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் நஜித் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு நேற்று மதியம் உணவு இடைவேளை நேரத்தில் இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கம், 22 வங்கி கிளைகளுக்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here