அரச கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக திறைசேரியில் வைக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போனமை தொடர்பாக இலங்கை மத்திய வங்கி சமர்ப்பித்த அறிக்கையை பொது நிதிக் குழு (COPF) ஆய்வு செய்துள்ளது.

இந்த விடயம், நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹர்ஷா டி சில்வா தலைமையில் கடந்த ஜூன் 23 அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொது நிதிக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

காணாமல் போன நிதி குறித்து நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு முன்னதாக கோப் குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையை மத்திய வங்கி ஆய்வு செய்த பின்னர் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கியின் அவதானிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து குழு உறுப்பினர்கள் விரிவான விவாதங்களை நடத்தினர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் அறிக்கை மற்றும் மத்திய வங்கியின் அறிக்கை ஆகியவற்றை பரிசீலித்த பின்னர், குழு ஒரு இறுதி அறிக்கையைத் தயாரித்து, உரிய நேரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்று பொது நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் நிதி அமைச்சின் செயலாளர் டொக்டர் ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கி ஆளுநர் டொக்டர் நந்தலால் வீரசிங்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால மற்றும் இலங்கை கணினி அவசரகால ஆயத்த குழுவின் (CERT) அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here