அநுராதபுரம், ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரணை – தம்புள்ளை பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை (12.12.2024) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளையிலிருந்து ஹபரணை நோக்கி பயணித்த கெப் வாகனம் ஒன்று பாதசாரி கடவையில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவர் ஆவார்.
சடலம் ஹபரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கெப் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








