இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, சிற்றுண்டிகள் மற்றும் பரோட்டாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை உணவக மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், குறித்த உணவுகளின் விலையை சிறியளவில் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக இன்று தெரிவித்தார்.
பணிப்பாளர் குழு கூட்டத்திற்கு பிறகு அதிகரிக்கப்பட்ட விலையை அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.







