இலங்கைக்கு அருகில் உள்ள வளிமண்டல மாற்றம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதால், ஏழு மாகாணங்கள் மற்றும் அநுராதபுர மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மையத்தின் கூற்றுப்படி, அக்டோபர் 21 முதல் அடுத்த சில நாட்களில் தீவு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளிலும், அநுராதபுர மாவட்டத்திலும் 100 மி.மீட்டருக்கு அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த எச்சரிக்கை அக்டோபர் 21 அன்று காலை 5:30 மணிக்கு விடுக்கப்பட்டு, அக்டோபர் 22 காலை 5:30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கனமழை சூழலை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

அம்பர் எச்சரிக்கை, குடியிருப்பாளர்கள் சாத்தியமான பாதகமான வானிலை நிலைமைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here