இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான புகையிரத நிலையங்கள் மற்றும் கட்டிடங்களின் கூரைகளில் சூரிய மின்கலங்களை பொருத்தி சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தியை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான 300 இற்கும் அதிகமான புகையிரத நிலையங்கள் காணப்படுவதடன், அவற்றின் சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தியை ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச தனியார் பங்குடமை முறையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.








