இயக்குனர் வெங்கட் பிரபு ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றினை புதிதாக வாங்கியுள்ளார்.
வெங்கட் பிரபு தற்போது வாங்கியுள்ள புதிய காரான, ரேஞ்ச் ரோவர் காரின் விலை சுமார் 86 லட்சங்கள் எனவும் கூறப்படுகின்றது.
மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் GOAT. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே அதிக இலாபத்தினைக் கொடுத்துள்ளதாகவும், படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளதுடன் மேலும் இந்தக் காரினை வெங்கட் பிரபு கோட் படத்தின் மூலம் பெற்ற இலாபத்தில் இருந்து வாங்கியுள்ளார் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








