
மகளிர் உலகக்கிண்ணம்: பாகிஸ்தானை 88 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டியில் இந்தியா 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி, 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்கள் பெற்றது.
வெற்றிக்காக 248 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி 43 ஓவர்கள் முடிவில் 159 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது.
இதன் மூலம், இந்திய மகளிர் அணி 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்து, தொடரில் தன்னுடைய வெற்றி தொடரைத் தக்க வைத்துள்ளது.