அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பரபரப்பான தெருவில் துப்பாக்கிச் சூடு நடத்தி 20 பேரைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் 60 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் தகவலின்படி, அவர் சுமார் 50 முதல் 100 தடவைகள் வரை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
எனினும், இந்தச் சம்பவம் பயங்கரவாதம் அல்லது கும்பல் நடவடிக்கைகளுடன் எந்தவித தொடர்பும் இல்லையென அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை சிட்னியின் இன்டர் வெஸ்ட் பகுதியில், அந்த நபர் கடந்து சென்ற வாகனங்கள் மற்றும் பொலிசார் மீது சீரற்ற முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசார் விரைவாக அப்பகுதியை முற்றுகையிட்டு, ஒரு வணிக நிலையத்தின் மேல் மாடி வீட்டுக்குள் நுழைந்து அந்த நபரை கைது செய்தனர். சம்பவ இடத்திலிருந்து இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்படும் போது காயமடைந்ததால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதுவரை அவர்மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.
சம்பவத்தில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் “கடுமையான” நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 19 பேர் உடைந்த கண்ணாடி மற்றும் துண்டுகள் காரணமாக காயமடைந்துள்ளனர்.
பொலிசார் தற்போது துப்பாக்கிதாரியின் நோக்கம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.








