உணவு ஒவ்வாமை காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
75 வயதான நெதன்யாகு, குடல் அழற்சி மற்றும் நீரிழிவு ஆகிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக அவர் நரம்பு வழியாகத் திரவங்களைப் பெறுகிறார் என்றும் ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெதன்யாகு உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் வீட்டிலிருந்தே 3 நாட்கள் பணிபுரிவார் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.








