மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here