நோர்வூட் வென்ஜர் பகுதியைச் சேர்ந்த சென்ஜோன் டில்லரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன மாணவியர்களில் அனூஜனின் தந்தையான ராஜ் குமார் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும் தனஞ்செயன் கஜரூபன், சுப்பிரமணியம் தனூஸ்கர், பார்த்தீபன் தியோஜன் ஆகியோருடன் அனூஜன் இன்று காலை பாடசாலைகளுக்கு சென்று வீடு திரும்பாத நிலையில் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here