நேற்று அதிகாலை மாதகலில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போனவரின் சடலம் இன்று காலை கரையொதுங்கியது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இரண்டு இளைஞர்கள் நேற்று அதிகாலை கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு திடீரென விபத்துக்குள்ளானது. இந்நிலையில் படகில் பயணித்த ஒருவர் நீந்திக்கொண்டிருந்த வேளை அருகே வந்த படகின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளார். மற்றைய இளைஞர் காணாமல் போனார். இவ்வாறு காணாமல் போனவரின் சடலம் இன்று கரையொதுங்கியது.

மாதகல் பகுதியை சேர்ந்த நாகராஜா பகீரதன் என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here