மண்ணுக்காக உயிர் தந்த கொடையாளர்களை நினைவுகூரும் வாரம் இடம்பெற்றுவரும் நிலையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வொன்று நேற்றையதினம் மானிப்பாயில் இடம்பெற்றது.

மானிப்பாய் மேற்கு திருவள்ளுவர் சனசமூக நிலையத்தில் 26.11.2024 செவ்வாய்க்கிழமை மாலை 3:00 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் பெற்றோர்கள் உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. பின்னர் உயிர் தியாகம் செய்தவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கப்பட்டு, நினைவுச் சின்னமாக தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here