மார்பகப் புற்றுநோய் தான் பெண்களை அதிக அளவில் அச்சுறுத்தும் புற்றுநோய் ஆகும். இதற்கு முக்கியக் காரணம் இதன் அறிகுறிகள் பற்றி சரிவர தெரிந்து கொள்ளாமல் இருப்பதும், மார்பகப் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் தான். 30 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா என்பது பற்றிய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
-
மார்பகப் புற்றுநோய் நிலை-0 என்றால் என்ன ?
மார்பக புற்றுநோய் நிலை-0 பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. வழக்கமான ஸ்கிரீனிங் சோதனையில் இதனை கண்டறிய முடியாது. பெரும்பாலான மேமோகிராம் சோதனையின் போது தான் இந்த நிலை- ௦ மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுவாக வலி, குறிப்பிடத்தக்க கட்டிகள் இருக்காது. அரிதிலும் அரிதான சந்தர்ப்பங்களில் தான் இந்த நிலையில் மார்பகத்தில் கட்டி ஏற்படும்.
2. மார்பக புற்றுநோய் வகைகள்
மார்பகப் புற்றுநோயில் நிலை- 0 இரண்டு வகைகள் உள்ளன.
1. டிசிஐஎஸ்: மார்பகக் குழாயின் புறணியில் அசாதாரண புற்றுநோய் செல்கள் காணப்படும்.
2. முலைக்காம்புகளில் பேஜெட் நோய்: இந்த வகையில் புற்றுநோய் நிலையில் அசாதாரண செல்கள் முலைக்காம்புகளின் தோல் செல்களில் காணப்படும்.
இது டிசிஐஎஸ் ஆகவோ அல்லது அதே மார்பகத்தில் ஊடுருவக்கூடிய மார்பக புற்றுநோயாக மாறும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனம் கூறுகிறது.
3. மார்பக புற்றுநோய் நிலை-0-க்கு சிகிச்சை உண்டா ?
மார்பக புற்றுநோய் நிலை-0-க்கு சிகிச்சை மேற்கொள்ளவது மிகவும் அவசியம் ஆகும்.
இந்த சிகிச்சைகள் மார்பகப் புற்றுநோயில் முன்னேற்றம் மற்றும் அசாதாரண செல்கள் பரவுவதற்கு முன்பு அவற்றை அகற்றவும் உதவும். அசாதாரண செல்கள் இருக்கும் இருப்பிடம் மற்றும் அதன் அளவைப் பொறுத்து லம்பெக்டோமி போன்ற அறுவை சிகிச்சைகள் மூலமும் அசாதாரண செல்களை அகற்ற முடியும்.
அறுவை சிகிச்சை மட்டுமின்றி, சில நேரங்களில் எஞ்சியிருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கவும், மீண்டும் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கவும் கதிர்வீச்சு சிகிச்சையும் பரிந்துரைக்கப்படுகிறது. சிகிச்சை அளிக்கப்படாத மார்பக புற்றுநோய் நிலை-௦ வரும்காலத்தில் மார்பக புற்றுநோயாக மாற அதிக வாய்ப்புகளை உருவாக்கும்.
4. மார்பகப் புற்றுநோயின் நிலை-0 அபாயம் யாருக்கு அதிகம்….?
மார்பக புற்றுநோயின் வலுவான குடும்ப வரலாற்றைக் கொண்ட பெண்கள், இளம் வயதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நெருங்கிய உறவினர்களைக் கொண்டவர்களுக்கு இதன் அபாயம் அதிகமாக உள்ளது.
அதுமட்டுமின்றி, அதிக அளவில் மேற்கொள்ளப்படும் கதிர்வீச்சு சிகிச்சை, மாதவிடாயின் மெனோபாஸ் காலம்,
30 வயதிற்குப் பிறகு முதல் கர்ப்பம் தரிப்பவர்கள்
மெனோபாஸ்க்குப் பிந்தைய ஹார்மோன் மாற்று சிகிச்சை,
உடல் பருமன்,
மது அருந்துதல்
உடல் செயல்பாடு இல்லாமை போன்ற வாழ்க்கை முறை காரணிகள் கூட இதற்கு காரணமாகும்.