நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 727 ஆண்களும், 16 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 12 பேர் பொலிஸ் தடுப்பு காவலுக்கும் இருவர் புனர்வாழ்வு நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 225 கிராம் 49 மில்லி கிராம் ஹெரோயின், 281 கிராம் 323 மில்லி கிராம் ஐஸ், 6388 கிராம் 385மில்லி கிராம் கஞ்சா, 1037 போதை மாத்திரைகள் மற்றும் 3957 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here