தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் ’85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ் நாடு காணாத ஒன்று’ என தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
அரசியல் என்பது அசகாய சூரர்களுக்கானது மாத்திரமே பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மாத்திரமே என ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தி வைத்திருந்தவர்களின் கணக்கு சாதாரண மக்களால் தற்பொழுது உடைத்தெரியப்பட்டுள்ளது.
இதுவரையில் அரசியல் பேசாத இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேச தொடங்கியுள்ளனர்.
2026 தமிழக தேர்தல், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் பதிவாகியுள்ளது. 85 சதவீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்றாகும்.
‘இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும் எப்படி தாக்கு பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியவருக்கு தன்னுடைய செயல் மூலம் பதிலடி கொடுத்த தோழர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி, வாழ்த்துக்கள். நம்பிக்கையுடன் இருப்போம் நல்லதே நடக்கும்’ என விஜய் மேலும் தெரிவித்துள்ளார்.








