வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்து வரும் சிலநாட்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

குறித்த பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில மழை தூறல்கள் ஏற்படக்கூடும் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here