செயற்கை அவயவங்கள் வழங்கும் நிகழ்வு மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் ஏற்பாடு செய்யப்பட்ட செயற்கை அவயவங்கள் வழங்கும் நிகழ்வு மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் வளாகத்தில் இடம்பெற்றது.



இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இயலாமையுள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களை வலுவுட்டும் நிறுவனத்தின் ஏற்ப்பாட்டில் இலங்கையின் ஆஸ்திரேலியா தூதரகத்தின் நிதி ஏற்பாட்டில் கண்டி மாற்றுத்திறனாளிகளுக்கான மையத்தினரால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த 25 பேருக்கு கை மற்றும் கால் அவயவங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இன் நிகழ்வில் கண்டி மாற்றுத்திறனாளிகளுக்கான மையத்தின் நிறுவன உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு. ஜெயானந்தராசா, கிராம சேவகர், பயனாளிகள் என்ன பலர் கலந்து கொண்டனர்.

[கிளிநொச்சி நிருபர் – பரமசிவன்]








