முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (12) காலை மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் சிறிது நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை தொடர்பாக வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த வைத்திய பரிசோதனை முடிவுகள் நல்ல நிலையில் இருப்பதால், அவர் தற்போது சாதாரண சிகிச்சையின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







