நாட்டில் நிலவும் தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு முன் எச்சரிக்கை அறிவிப்பை புதுப்பித்து வெளியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (12) மாலை 4.00 மணி முதல் நாளை (13) இரவு 4:00 மணி வரை 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எச்சரிக்கை பகுதிகள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.

எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையுடன் இருக்கவும் (அம்பர்)

கேகாலை மாவட்டம்: மாவனெல்லை, ருவன்வெல்லை, புலத்கொஹுபிட்டிய

எச்சரிக்கை நிலை 1 – அவதானமாக இருக்கவும் (மஞ்சள்)

பதுளை மாவட்டம்: எல்லை, பசறை

கொழும்பு மாவட்டம்: பாதுக்கை

கண்டி மாவட்டம்: ஹத்தரலியத்தை, தும்பனை

கேகாலை மாவட்டம்: தெஹிஓவிட்டை, கேகாலை, ரம்புக்கனை, யட்டியந்தோட்டை, அரநாயக்க, வரக்காபொலை

மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்கை கோரளை, ரத்தோட்டை, மாத்தளை

நுவரெலியா மாவட்டம்: ஹங்குரன்கெத்தை

இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்டை, அயகம, எஹலியகொடை, வலிகேபொலை, இரத்தினபுரி, கலவானை, இம்புல்பே, நிவித்திகலை

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here