கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரமந்தநாறு மயில்வானபுரம் பகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் தமது வாழ்வாதாரமாக முருங்கைச் செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்பொழுது 40 ரூபாய் 50 ரூபாய்க்கு என கொள்வனவு செய்யப்படுவதாகவும் தற்பொழுது முருங்கைச் செய்கையின் அநேகமான விவசாயிகள்  முருங்கைக்காய்க்கு உரிய விலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தமது பகுதியில் நூற்றுக்கும் அதிகமானோர்  முருங்கைச் செய்கையினை மேற்கொண்டு வருவதாகவும், அரசாங்கத்தினால் எமக்கொரு உரிய விலையினை பெற்றுத்தர வேண்டும் எனவும் அவ்வாறில்லையெனின் தாம் முருங்கச்செய்கையில் இருந்து முற்றும் முழுதாக விடுபட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் எமது பகுதியில் உள்ள முருங்கைச் செய்கையாளரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எமது பகுதி விவசாயிகளுக்கு உரிய விலையினை பெற்று தர வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here