பலத்த மழையினால் குடா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று சனிக்கிழமை (17.08) காலை 9.00 மணி முதல் சுமார் 48 மணி நேரத்திற்கு மூன்று பிரதேச செயலகங்களுக்கு வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடா கங்கையின் ஆற்று நீர் மட்டத்தை ஆய்வு செய்ததையடுத்தே நீர்ப்பாசன திணைக்களத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, மதுராவளை மற்றும் பாலிந்த நுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட குடா கங்கை மற்றும் மகுர கங்கையின் தாழ்வான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here