நேற்றையதினம் தொழிலதிபர் ஒருவர் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 20 மாணவர்களுக்கு 20 துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார்.
குறித்த தொழிலதிபர் தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவை முன்னிட்டு, நேற்றையதினம் யாழ்ப்பாணம் – கொடிகாமம், மிருசுவில் பகுதியில் ஒரு ஹோட்டலினை திறந்து வைத்துள்ளார்.
இதன்போது யாழ்ப்பாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட, வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட 20 மாணவர்களுக்கு இவ்வாறு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்து அவர்களது கற்றல் செயற்பாடுகளுக்கு ஊக்குவிப்பு அளித்துள்ளார். அத்துடன் தான் தொடர்ச்சியாக இவ்வாறான உதவித் திட்டங்களை செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வில் இந்து, கிறிஸ்தவம், பௌத்தம் மற்றும் முஸ்லிம் மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வமதகுருக்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here