யாழ்.தென்மராட்சி வரணி நாவற்காடு வாணி முன்பள்ளியில் மரநடுகை நிகழ்வு நேற்றையதினம் (04.11.2024) சிறப்பாக இடம்பெற்றது.

இன்பக்கரம் அறக்கட்டளை அமைப்பினூடாக முன்பள்ளியை அழகு படுத்துதலும் மரநடுகையும் என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்பக்கரம் அறக்கட்டளையின் இந்த செயற்பாட்டிற்கு சமூக சேவகர் சி.பிரபாகரன் அவர்கள் நிதி வழங்கியிருந்ததுடன் பல்வேறு உதவிகளையும் செய்திருந்தார்.

முன்பள்ளி முகாமை உத்தியகக் குழுத் தலைவர் திரு.சுப்ரமணியம் கலீபன் தலைமையில் முன்பள்ளியில் இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும் சமூக சேவகருமான திரு.சிதம்பரப்பிள்ளை பிரபாகரன் அவர்களும், ஆயுள்வேத வைத்தியர் திரு விநாயகமூர்த்தி மிராஜ் அவர்களும், இன்பக்கரம் அறக்கட்டளையின் நிறுவுனரும் மேலும் இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய நிகழ்வில் மாதுளை, ஜம்பு நாவல், கமுகு, கொய்யா, போன்ற பயந்தரு மரங்களும், அழகுத்தாவரங்களும் நாட்டிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here