Thursday, October 15, 2026
No menu items!

யாழ்.தென்மராட்சி

கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகர் ஆலயத்தின் தேர் திருவிழா!

யாழ்.தென்மராட்சி, மீசாலை வடக்கு, வேம்பிராய் -  கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகர் ஆலயத்தின் தேர் திருவிழா நேற்று (18/04/2025) சிறப்பாக நடைபெற்றது. தான்தோன்றி விநாயகனாகத் திகழும் கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகருக்கு 10 தினங்கள் வருடாந்த மகோற்சவம் இடம்பெறுகிறது. நேற்று 9 ஆம் திருவிழா தேர்த் திருவிழாவாகும். இன்றைய தினம் தீர்த்தத் திருவிழா இடம்பெறும்.

வெள்ள நீர் தேங்கி நிற்கும் பிரதேசங்கள் – அதிகாரிகளின் நடவடிக்கை என்ன?

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் நாவலடிப் பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடாது தேங்கி நிற்கும் பிரதேசத்தை ரயில்வே திணைக்கள அதிகாரிகள் இன்று (19.12.2024) காலை பார்வையிட்டனர். மக்களின் கோரிக்கைக்கிணங்க வெள்ளநீர் தேங்கிய இடங்களை பார்வையிட்ட அதிகாரிகள் மக்களுடன் கலந்துரையாடியதுடன் இனிவரும் காலப்பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.

யாழ்.தென்மராட்சி வரணி நாவற்காடு வாணி முன்பள்ளியில் மரநடுகை நிகழ்வு…

யாழ்.தென்மராட்சி வரணி நாவற்காடு வாணி முன்பள்ளியில் மரநடுகை நிகழ்வு நேற்றையதினம் (04.11.2024) சிறப்பாக இடம்பெற்றது. இன்பக்கரம் அறக்கட்டளை அமைப்பினூடாக முன்பள்ளியை அழகு படுத்துதலும் மரநடுகையும் என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்பக்கரம் அறக்கட்டளையின் இந்த செயற்பாட்டிற்கு சமூக சேவகர் சி.பிரபாகரன் அவர்கள் நிதி வழங்கியிருந்ததுடன் பல்வேறு உதவிகளையும் செய்திருந்தார். முன்பள்ளி முகாமை உத்தியகக் குழுத் தலைவர்...

யாழில் ரயிலுடன் ஹயஸ் வான் மோதுண்டு விபத்து..!

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் ரயிலுடன் ஹயஸ் வான் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் நேற்று பிற்பகல் 4 மணிக்கு கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த வான் தவசிகுளம் பகுதிக்கு செல்வதற்காக ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில்...

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மரக்குற்றிகளுடனான டிப்பரை கைப்பற்றிய பொலிஸார்….

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சூட்சுமமாக மறைத்து கடத்திச் செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன் டிப்பர் வாகனம் ஒன்றை இன்று (08.08) காலை 9 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர். கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ்...

யாழ்.தென்மராட்சி கண்டுவில்- ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய தேர்த்திருவிழா!

யாழ்.தென்மராட்சி கண்டுவில்- ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய தேர்த்திருவிழா இன்று(20) சிறப்பாக இடம் பெற்றது. அம்பாள் தேரேறிவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதன்போது தூக்குக்காவடி, காவடி, பாற்குடம் மற்றும் கற்பூரச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்தனர். பத்து நாள் இடம்பெறும் திருவிழாவில் நாளைய தினம் தீர்தோற்சவம் இடம்பெறும்.
- Advertisement -spot_img

Latest News

சிற்றூழியர்களுக்கு பதிலாக இராணுவம்; அதிரடி காட்டும் அரசாங்கம்

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து அத்தியாவசிய சுகாதார சேவைகள் தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதற்காக இலங்கை இராணுவத்தினர் அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வைத்தியசாலையின்...
- Advertisement -spot_img