பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் கருத்துக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்ட சேனாரத்ன, வெளிநாட்டு ஊழியர்களை வாக்களிக்க இலங்கைக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் வலையொளிக்கு அச்சுறுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தேசிய மக்கள் சக்தி அரசியல் சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களிக்க இலங்கைக்கு வர வேண்டாம் என புலம்பெயர் தொழிலாளர்களை சேனாரத்ன அச்சுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பல மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும், அச்சுறுத்தும் அறிக்கைகளை வெளியிடுவது சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை உறுதிப்படுத்துவதற்கு தடையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here