திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: இனவாதமாக மாற்ற வேண்டாம் – நாமல் ராஜபக்ஷ!
திருகோணமலை புத்தர் சிலை தொடர்பான பிரச்சினையை இனவாத திசை நோக்கி தள்ளுவதற்கு இடமளிக்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (17) கருத்து வெளியிட்ட அவர், அரசு உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையை அமைதியாகத் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். அவர் மேலும்
மாகாணசபைத் தேர்தல் தாமதம்: வட–கிழக்கு மக்களுக்கு துரோகம் – இரா. துரைரெட்னம்!
அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது, வடக்கு–கிழக்கு மக்களுக்குச் செய்யப்படும் பெரிய துரோகம் என்று கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்னம் கண்டனம் தெரிவித்துள்ளார். வவுணதீவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், மாகாணசபை முறைமை குறித்து மக்களுக்குள் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதையும், தொடர்ந்து நடைபெறும் தேர்தல் தாமதம் பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகவும் கூறினார். மேலும்,
“ரத்த காட்டேரி” போல மக்களின் வருமானத்தை உறிஞ்சும் அரசாங்கம்; எஸ்.எம். மரிக்கார் குற்றச்சாட்டு!
வரிகளை விதித்து அரச வருமானத்தை அதிகரிப்பது ஓர் பாரிய விடயம் அல்ல இது “ரத்த காட்டேரி” போல மக்களின் வருமானத்தை உறிஞ்சுவதாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மின்சார கட்டணங்கள், நீர் கட்டணங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள
‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் “– எம்.பி. கோடீஸ்வரன் விமர்சனம்!
ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ என்ற வித்தியாசமின்றி, அரசியல்வாதிகள் தங்கள் இனம் மற்றும் மத அடிப்படையில் மட்டுமே சிந்தித்து செயற்படுகின்றனர் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், பௌத்தத்தை முன்னிலைப்படுத்தி புத்தசாசன அமைச்சை உருவாக்கியுள்ளதையும், ஆனால் பிற மதங்களுக்காக எந்த அமைச்சும் நிறுவப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், எதிர்க்கட்சித் தலைவரும்
வடக்கு மாகாண சுகாதாரத் துறையில் வேறுபட்ட நடைமுறைகள் – எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா குற்றச்சாட்டு!
வடக்கு மாகாணத்தில் மட்டுமே சுகாதாரத் துறையில் சில தனிப்பட்ட நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், வடக்கு மாகாண தாதியர் உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இன்று (13) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது, அவர் தெரிவித்ததாவது: “மன்னார் உட்பட வடக்கு மாகாணம் முழுவதும் நேற்று (12)
சுங்கச் சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் – விசாரணைக்குழுவிற்கு எதிர்க்கட்சியிலிருந்து நான்கு உறுப்பினர்கள் நியமனம்!
சுங்கச் சோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றம் நியமிக்கும் விசேட குழுவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அஜித் பி. பெரேரா, முஜிபுர் ரஹ்மான், தயாசிறி ஜயசேகர, மற்றும் இராசமாணிக்கம் இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோர் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இந்த நான்கு பேரின் பெயர்கள் நேற்று
பாலியல் கல்வி பாடத்திட்டம் குழந்தைகள் பாதுகாப்புக்காக உருவாக்கப்படும் – கல்வி அமைச்சர்!
பாலியல் துஷ்பிரயோகத்தைக் குறைக்கும் நோக்கத்துடன், குழந்தைகளுக்கான வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமரின் தலைமையில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து கண்டி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாலியல் கல்வித் திட்டத்தை
யாழில் இடம்பெறும் குற்ற செயல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி – ஆனந்த விஜேபால..!
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத சொத்து சேகரிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். இதேவேளை நாடளுமன்றத்தில் உரையாற்றிய ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் மாபியாக்கள், போதைப்பொருட்களை விற்று
2026 வரவு செலவுத் திட்டம் மக்களுக்கானதல்ல – சஜித் பிரேமதாச விமர்சனம்..!!
2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டதாகவும், அதில் மக்களுக்கு எந்தவிதமான சலுகைகளும் நிவாரணங்களும் இல்லையெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தனது வரவு செலவு திட்ட உரையை வழங்கியதைத் தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் முதல் நாள் இன்று!!!
2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (08) முதல் ஆரம்பமாகிறது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகப் நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை