வாழைச்சேனை, பொலன்னறுவை வீதியிலுள்ள மியான்குளம் பகுதியில் லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று புதன்கிழமை  (04.12.2024) இரவு இடம்பெற்றுள்ளதுடன் லொறி சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

புனானை ஓமனியாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய  கனகசூரியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவதினமான நேற்று இரவு 8.00 மணிக்கு பொலனறுவை பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த லொறியும் வாழைச்சேனையில் இருந்து புனானை நோக்கி பிரயாணித்த முச்சக்கரவண்டியும் மியான்குளம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மச்சக்கரவண்டியில் பிரயாணித்த 65 வயதுடைய ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  • மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here