2024 ஜனவரி முதல் ஏப்ரல் 2025 வரை ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்திற்காக ரணில் ஒதுக்கிய அதே தொகையை ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவும் 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒதுக்கியுள்ளதாக கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இடைக்கால நியமக் கணக்கு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கபீர் ஹாசிம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 1.4 டிரில்லியன் ரூபா ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி அனுர திசாநாயக்கவுக்காக 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 1.4 டிரில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.







