வறண்ட காலநிலை காரணமாக 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

அதன் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனஞ்சூரிய இது குறித்து கூறுகையில், 4 மாவட்டங்களில் உள்ள 17 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வறண்ட காலநிலையால் பாதிப்படைந்துள்ளனர்.

இதற்கமைய, 21,873 குடும்பங்களைச் சேர்ந்த 68,041 பேர் வறண்ட காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் 3,495 குடும்பங்களைச் சேர்ந்த 12,291 பேருக்கு தேவையான தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரகீத் தனஞ்சூரிய தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக உள்ளூர் அரச அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து வேலைத்திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here