எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் வாக்களிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். அவர்கள் சென்ற விண் கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் தொடர்ந்து விண்வெளி நிலையத்தில் தங்கி இருக்கும் இவர் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் தான் பூமிக்கு திரும்புவார்.
இந்நிலையில், அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வாக்களிப்பதற்காக சுனிதா, முதலில் அவர் பெடரல் போஸ்ட் கார்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுப்பார். அதன் பிறகு விண்வெளி கணிணிமூலம் மின்னணு வாக்களிக்க உள்ளார்.








