வில்பத்து தேசிய பூங்காவின் கொல்லன்கனட்ட பகுதியில் நேற்று மாலை (30) உயிரிழந்த நிலையில் டொல்பின் ஒன்று கரை ஒதுங்கியதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
வில்பத்து தேசிய பூங்கா அதிகாரிகளின் வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி வலையில் சிக்கிய நிலையில் ஏற்பட்ட காயங்களின் அறிகுறிகள் அதன் உடலில் காணப்பட்டமை ஆரம்பகட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காக எலுவாங்குளம் வனஜீவராசிகள் சரணாலயத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், அப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக கடல் வனஜீவராசிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








