மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றில் ஆண் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை (5/26/2025) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜெயந்திபுரம் குமாரத்தன் கோவில் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான ரவி என அழைக்கப்படும் அண்ணாமலை ரவீந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் சம்பவதினமான இன்று காலை வீட்டின் முன்பகுதியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]







