வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இன்று(09) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக 72 சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

பொருளாதார நீதியை நிறைவேற்றுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்த

போதும், இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றஞ்சுமத்தி வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மத்திய மாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைகளில் எதிர்வரும் 13ஆம் திகதியும் சப்ரகமுவ மாகாணத்தில் எதிர்வரும் 14ஆம் திகதியும் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here