இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 26ம் திகதி திங்கட்கிழமை வருகிறது.
அன்றைய தினம் காலை 09.13 மணி துவங்கி, ஆகஸ்ட் 27ம் திகதி காலை 07.30 வரை அஷ்டமி திதி உள்ளது.
அதே சமயம், ஓகஸ்ட் 26ம் திகதி இரவு 09.41 மணிக்கே ரோகிணி நட்சத்திரம் துவங்குகிறது.
ஆகஸ்ட் 27ம் திகதி இரவு 08.54 மணி வரை ரோகிணி நட்சத்திரம்.
இருந்தாலும் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் இரவு நேரமே கிருஷ்ணர் அவதரித்த நாளாக கருதப்படுவதால் ஆகஸ்ட் 26ம் திகதி மாலையே கிருஷ்ண ஜெயந்தி வழிபாடுகளை செய்ய வேண்டும்.
இனி எந்த ராசியினர் எந்த கிருஷ்ணாவை வணங்க வேண்டும் என்று பார்க்கலாம்…
- மேஷம் – சங்கு சக்கரம் ஏந்திய கிருஷ்ணன்
- ரிஷபம் – பசுவுடன் உள்ள கிருஷ்ணன், குழல் ஊதும் கிருஷ்ணன்
- மிதுனம் – ராதையுடன் உள்ள கிருஷ்ணன், பலராமன் உடன் இருக்கும் கிருஷ்ணன்
- கடகம் – யசோதை உடன் உள்ள கிருஷ்ணன்
- சிம்மம் – மலையை தூக்கி தன் மக்களை காக்கும் கிருஷ்ணன், கிரீடம் தரித்த கிருஷ்ணன்
- கன்னி – தனது மனைவியர் உடன் உள்ள கிருஷ்ணன்
- துலாம் – துலாபாரம் செய்யும் விதத்தில் உள்ள கிருஷ்ணன்
- விருச்சிகம் – காளிங்க நர்த்தனன்
- தனுசு – தேரோட்டி கிருஷ்ணன்
- மகரம் – மாடு மேய்க்கும் கிருஷ்ணன், குருவாயூர் கிருஷ்ணன்
- கும்பம் – வெண்ணை பானையுடன் உள்ள கிருஷ்ணன்
- மீனம் – கீதா உபதேசம் செய்யும் கிருஷ்ணன், தசாவதாரம்





