தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) பதுளை, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 5 மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை புதன்கிழமை (21) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மற்றும் இரத்தினபுரியின் சில பகுதிகளுக்கு அம்பர் நிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து மாவட்டங்களிலும் உள்ள பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு மஞ்சள் நிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவுகள், பாறை சரிவு மற்றும் நிலம் தாழ்வடைதல் ஏற்படக்கூடும் என நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதேவேளை தரையில் வெடிப்புகள், சாய்ந்த மரங்கள் மற்றும் தரையில் இருந்து சேற்று நீர் வெளிவருதல் உள்ளிட்ட எச்சரிக்கை அறிகுறிகளை கவனிக்குமாறும், அத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here