இலங்கையின் திறைசேரி இன்று சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 695 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொண்டதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உறுதிப்படுத்தினார்.

இலங்கையின் கடன் திட்டத்தின் 5வது மற்றும் 6வது மறுஆய்வுகளுக்கு பின்னர் மே 27 அன்று சர்வதேச நாணய நிதியம் அனுமதி அளித்த நிலையில் இந்த நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கமைய இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2.4 பில்லியன் டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மத்திய கிழக்கு போர் மற்றும் தித்வா புயல் சேதம் போன்ற சவால்கள் காணப்பட்ட போதிலும், இலங்கையின் சீர்திருத்தங்கள் “பொதுவாக வலுவாக” உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், டிசம்பர் 2025-க்கான சகல நிதி இலக்குகளும் எட்டப்பட்டதாகவும் மேலும் எரிபொருள்/மின்சார விலை சீர்திருத்தங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் 2025-ல் 5% ஆகவிருந்த பொருளாதார வளர்ச்சி, 2026-ல் 3% ஆகக் குறையும் என்றும் பணவீக்கம் 5% ஆக அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ள நாணய நிதியம், புயல் மீட்புப் பணிகளுக்காக 2026-ல் அரசாங்கம் மேலதிகமாக செலவிட நேரலாம் எனினும், 2027 முதல் மீண்டும் நிதிநிலை அறிக்கை இலக்குகளை எட்ட வேண்டும் என்று IMF குறிப்பிட்டுள்ளது.

இந்த நிதி உள்பாய்ச்சலானது தற்போது நாடு எதிர்நோக்கும் டொலர் நெருக்கடி சூழலில், அந்நிய செலாவணிக் கையிருப்பை நிலைப்படுத்த உதவும் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here