Tuesday, June 9, 2026
No menu items!

சர்வதேச நாணய நிதியம்

695 மில்லியன் டொலர்களை விடுவித்துள்ள சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் திறைசேரி இன்று சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 695 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொண்டதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உறுதிப்படுத்தினார். இலங்கையின் கடன் திட்டத்தின் 5வது மற்றும் 6வது மறுஆய்வுகளுக்கு பின்னர் மே 27 அன்று சர்வதேச நாணய நிதியம் அனுமதி அளித்த நிலையில் இந்த நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கமைய இத்திட்டத்தின் கீழ்...

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளை; அவதானம் செலுத்தும் ஐ.எம்.எப்

இலங்கையின் நிதி அமைச்சின் கணினி அமைப்பின் ஊடாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது சர்வதேச நாணய நிதியம் (IMF) அவதானம் செலுத்த தொடங்கியுள்ளது. இந்த விடயத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பிரபல ஊடகத்திடம் உறுதிப்படுத்தியுள்ளது. டிசம்பர் 2025 முதல் ஜனவரி 2026 வரையிலான காலகட்டத்தில்,...

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றம்– சர்வதேச நாணய நிதியம்!

எதிர்வரும் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 3.1 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்லின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இதைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் IMF உடனான சீர்திருத்த வேலைத்திட்டத்தைத் தொடங்கியதன் பின்னணியில், நாட்டின் பொருளாதாரம் வலுவான மீட்சியை...

இலங்கையில் சூதாட்ட வரி அதிகரிப்பு: கெசினோ நுழைவுக் கட்டணம் இருமடங்காக உயர்வு!

நிதியமைச்சு அறிவித்தபடி, குதிரைப் பந்தயப் பணயக்காரர்கள் மற்றும் சூதாட்டத் தொழில்முனைவோர் மீது அறவிடப்படும் மொத்த சேகரிப்பு வரி தற்போதைய 15% இலிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரி 2025 அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதே நேரம், இலங்கை பிரஜைகள் கெசினோக்களில் நுழையச் செலுத்த வேண்டிய நுழைவுக் கட்டணமும் 100%...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியுடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான பிரதிநிதி எவான் பாபஜியோர்ஜியு (Evan Papageorgiou), நேற்று (29) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, அரசாங்கம் முன்னெடுத்து வரும் மறுசீரமைப்பு திட்டத்தின் முன்னேற்றம், நிர்வாகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள், மற்றும் ஊழலைக் குறைக்கும் முயற்சிகள் தொடர்பாக அவர் தனது பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், வரிக்...

2026 ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் 3.1 சதவீதத்தினால் வளர்ச்சியடையுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது!

உலக பொருளாதாரம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உலகளாவிய பணவீக்கம் இந்த ஆண்டு 4.2 சதவீதமாகவும், 2026 ஆம் ஆண்டில் 3.6 சதவீதமாகவும், குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அமெரிக்க வரிக் கொள்கையை எதிர்கொள்வதால் உலகப் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பொருளாதார நிலைமை பலவீனமான நிலையில்...

பதவியை ராஜினாமா செய்யவுள்ள IMF  முதன்மை பிரதி!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத், தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். அவர் 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் மீண்டும் இணையவுள்ளதாகவும், அங்கு அவர் முதல் கிரகரி மற்றும் ஆனியா கோஃபி பொருளாதாரப் பேராசிரியராகப் பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் அமெரிக்கா பொறுப்பு ஏற்க வேண்டும்: ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தல்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியில் கையொப்பமிட்டவர் என்ற வகையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு உதவும் பொறுப்பு, அமெரிக்காவுக்கு உள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா இப்போது இலங்கைக்கு வரி விடயத்தில் உதவ வேண்டும் என்ற அடிப்படையிலேயே, அவரின் இந்தக்கருத்து வெளியாகியுள்ளது. அமெரிக்கா இந்த விடயத்தில் உதவவில்லையெனில், அமெரிக்கா குறித்த...

அடுத்த IMF கொடுப்பனவுக்கான தீர்மானம் விரைவில் – 344 மில்லியன் டொலர் இலங்கை பெற வாய்ப்பு!

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கடன் தொகையின் அடுத்த தவணையை ஒப்புதல் அளிப்பது தொடர்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுக் குழு எதிர்வரும் வாரங்களில் கூடவுள்ளது. IMF பேச்சாளர் ஜுலி கொசாக், வொசிங்டனில் நேற்று (22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இலங்கை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார். ஏப்ரல் 25ஆம் திகதி, இலங்கையில் இடம்பெற்ற பணிக்குழாம் மட்ட...

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி முடிவு..!

இலங்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் நான்காவது மீளாய்வுடன் தொடர்புடைய ஊழியர் மட்ட ஒப்பந்தத்திற்கு இணைந்ததாக, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதற்காக இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என அதன்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img